RSS

நா‌ன் பகு‌‌த்த‌றிவாள‌ன்: கம‌ல்ஹாச‌ன்

நா‌ன் நாத்திகன் அல்ல, பகுத்தறிவாள‌ன் என்று ந‌டிக‌ர் கமல்ஹாசன் கூறினார்.
‌‌விஜ‌ய் டி‌வி நட‌த்‌தி பாராட்டு விழாவி‌ல் நடிக‌ர் கமல்ஹாச‌ன் பேசுகை‌யி‌ல், நான் சினிமாவிற்கு வரும்போது நிறைய கனவுகளோடு வந்தேன். ஆனால் அது ஒன்று கூட நிறைவேறவில்லை. என்னால் நிறைவேற்ற முடியவில்லை. 50 வருடம் சாதித்துள்ளேன் என்று கூறுகிறீர்கள். அதற்கு அன்புதான் காரணம். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தன்னை தாழ்த்தி என்னை உயர்த்தி உள்ளார். அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்தான். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நட்பு இல்லை, அதையும் தாண்டியது. ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் தேடுகிறார். நான் சமூகத்தில் தேடுகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாத்திகன் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பகுத்தறிவாளன் என்று கூற வேண்டும். என் மகள் எனக்காக தினமும் கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால் அவரின் அன்பை நேசிக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது அழக்கூடாது, சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டேன். இது இரண்டுமே நடக்கவில்லை. இங்கு திரையுலக பிரமுகர்கள் அனைவரும் வந்துள்ளனர். என் மீதுள்ள அன்பு காரணமாகவே வந்துள்ளனர். அவர்கள் கால்களை தொட்டு வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன். மம்முட்டியோடு பேசும் போது இருவரும் 3 தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறோம். அடுத்த விருது யார் வாங்குகிறோம் பார்க்கலாம் என மம்முட்டி என்னிடம் கூறினார். இந்த போட்டியில் நான் ஜெயிப்பேனா என்பது தெரியவில்லை. ஆனால் நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களை போல திரையுலகில் சிறந்த நண்பர்களாக வேறுயாராவது விளங்க முடியுமா என்று நான் பதில் சவால் விடுகிறேன் எ‌ன்று கம‌ல்ஹாச‌ன் பே‌சினா‌ர்.

எ‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு கமலே காரண‌ம்: ர‌‌ஜி‌னிகா‌ந்‌‌த்

கமல்ஹாசனை பார்த்து நடிக்க கற்று கொண்டேன் என்று‌ம் திரையுலகில் தான் வளர்ச்சி அடைந்ததற்கு கமலே காரணம் என்றும் சூ‌ப்ப‌ர் ‌ஸ்டா‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌‌த் பெரு‌மித‌த்துட‌ன் கூறினார்.
கமல்ஹாசனின் திரையுலக பொன் விழாவை கொண்டாடும் வகையில் விஜய் டிவி சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சூ‌ப்ப‌ர் ‌ஸ்டா‌ர் ரஜினிகாந்த், கமலை பற்றி எல்லோரும் பேசிவிட்டனர். இனி பேச ஒன்றுமில்லை என்று கூறலாம். ஆனால் அது உண்மை இல்லை. கமலை பற்றி 2 நாட்கள் பேசி கொண்டிருக்கலாம். 1975இல் நான் திரையுலகில் அறிமுகமான போது கமல்ஹாசன் பெரிய நடிகனாக இருந்தார். ஆனால் எந்த ஈகோவும் இல்லாமல் என்னோடு சேர்ந்து நடித்தார். பாலச்சந்தர் இயக்கத்தில் மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள், அவர்கள் உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு மற்ற இயக்குனர்களின் படங்களிலும் சேர்ந்து நடித்தோம். இப்படி 10க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்தோம். அப்போது கமல் நினைத்திருந்தால் என்னை போடக்கூடாது என்று சொல்லியிருக்கலாம். அவர் சொன்னதை எல்லா இயக்குனர்களும் கேட்டிருப்பார்கள். ஆனால் பெருந்தன்மையோடு என்னோடு இணைந்து நடித்தார். நான் இந்த அளவுக்கு பெரிய நடிகனாக கமலே காரணம். நான் அவரை பார்த்துதான் நடிக்க கற்றுகொண்டேன். ஒருமுறை பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ன் போது நான் அவர் நடிப்பை பார்க்காமல் சிகரெட் பிடிக்க வெளியே சென்றுவிடுவேன். குருநாதர் என்னை தேடுவார். நான் வந்தவுடன் எங்கடா போனே “தம்” அடிக்கவா? ஏன்டா. கமல் நடிப்பை பாருடா நடிப்பை கத்துக்கோடா என்று கூறுவார். பின்னர் ஒரு கட்டத்தில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தால் நீங்கள் முன்னேற முடியாது என்று கமல் என்னிடம் கூறினார். நாம் ஒன்றாக இருந்தாலும் ரசிகர்கள் பிரித்து வைத்து விடுவார்கள். அந்த நிலை உங்களுக்கு வேண்டாம் என்று தெரிவித்தார். அதன் பிறகே நான் தனியே நடித்தேன். நான் தொட்ட விஷயங்களை கமல் தொட்டிருக்கிறார். ஆனால் கமல் தொட்ட விஷயங்களை நான் தொடாமல் நடித்தேன். ராஜ்கபூர், திலிப் குமார் போன்ற இந்தி நட்சத்திரங்கள், கமல் இருக்கும் இடத்தில் இவன் எப்படி இவ்வளவு பெரிய நடிகனாக உயர்ந்தான் என்று வியந்து போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு கமல் சிறந்த நடிகர். நான் அவரால்தான் இந்த நிலையை அடைந்தேன். மோகன்லால், மம்முட்டி மற்றும் என் போன்ற கலைஞர்களை கலைத்தாய் கையை பிடித்து அழைத்து செல்கிறாள். ஆனால் கமலை மட்டும் இடுப்பில் வைத்து மார்போடு அணைத்து செல்கிறாள். காரணம் கமல் 10 ஜென்மம் தவமிருந்து நடிப்பு வரத்தை பெற்றிருக்கிறார். நான் நடித்துக் கொண்டிருக்கும் எந்திரன் படம் கமல் நடிக்க வேண்டிய படம். அவருக்குதான் ஷங்கர் ரெடி பண்ணினார். ஆனால் சில கால தாமதத்தால் இப்போது மாறி போய் உள்ளது. ஷங்கர் ரோபோ பற்றி என்னிடம் கதையை சொல்லும்போது நான் நடிக்கமாட்டேன். இது கமலுக்காக தயார் செய்த கதை. அதில் என்னை கொண்டு வரமுடியாது என்றேன். ஆனால் ஷங்கர் சார் இது உங்களுக்காக வேறு மாதிரி செய்துள்ளேன் எ‌ன்றா‌ர். நான் கூட ஷங்கரிடம் கமலை மனதில் வைத்து கொண்டு என்னை வேலைவாங்கக்கூடாது என்று கூறினேன். ஒரு சில காட்சிகளில் அதிக டேக் வாங்கும் போது, ஷங்கரிடம் இதையே மீண்டும் நினைவுபடுத்துவேன். கமல் வாழ்ந்த காலத்தில் அவரோடு சேர்ந்து நடித்துள்ளேன் என்பதற்கான வரலாற்று பதிவாக இந்த விழா அமைந்துள்ளது எ‌ன்று ர‌ஜி‌‌னிகா‌ந்‌த் பே‌சினா‌‌ர்.
1999லேயே ஆரம்பித்தது சுட்டெரிக்கும் வெயில்!
செப்டம்பர் 29,2009,
நியூயார்க்: உலக வெப்பமயமாதலால், உலகின் வெப்பநிலை, 1999ம் ஆண்டு முதல் 0.01 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது. உலகின் வெப்பநிலை, இன்னும் சில ஆண்டுகள், இதே நிலையில் தொடரவோ அல்லது அடுத்த சில ஆண்டுகளில் குறையவோ செய்யலாம் என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது. வெப்பமயமாதல் அதிகரிப்பால், பருவநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்கா அதிகளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுவதை தடுப்பதற்கான சட்டம் ஆகியவற்றை கொண்டு வருவதில் தாமதம் ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.உலக வெப்பமயமாதலால், பல்வேறு வெப்பநிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பருவம் தவறிய மழை, திடீர் புயல், பனி மலை உருகுதல் மற்றும் கடல் மட்டம் உயருதல் உட்பட, பல வானிலை மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 1999ம் ஆண்டு முதல், உலகின் வெப்பநிலை 0.01 டிகிரி பாரன்ஹீட் உயர்ந்துள்ளது.
1999லேயே ஆரம்பித்தது சுட்டெரிக்கும் வெயில்!
நியூயார்க்: உலக வெப்பமயமாதலால், உலகின் வெப்பநிலை, 1999ம் ஆண்டு முதல் 0.01 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது. உலகின் வெப்பநிலை, இன்னும் சில ஆண்டுகள், இதே நிலையில் தொடரவோ அல்லது அடுத்த சில ஆண்டுகளில் குறையவோ செய்யலாம் என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது. வெப்பமயமாதல் அதிகரிப்பால், பருவநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்கா அதிகளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுவதை தடுப்பதற்கான சட்டம் ஆகியவற்றை கொண்டு வருவதில் தாமதம் ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.உலக வெப்பமயமாதலால், பல்வேறு வெப்பநிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பருவம் தவறிய மழை, திடீர் புயல், பனி மலை உருகுதல் மற்றும் கடல் மட்டம் உயருதல் உட்பட, பல வானிலை மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 1999ம் ஆண்டு முதல், உலகின் வெப்பநிலை 0.01 டிகிரி பாரன்ஹீட் உயர்ந்துள்ளது.
2007-08 தமிழக அரசின் திரைப்பட விருதுகள்
செவ்வாய், 29 செப்டம்பர் 2009
2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிவா‌ஜி படத்தில் நடித்ததற்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதுக்கு ர‌ஜினியும், தசாவதாரம் படத்துக்காக 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதுக்கு கமலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உளியின் ஓசை படத்துக்காக சிறந்த வசனர்த்தாவாக முதல்வர் கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற விருது விவரங்கள் வருமாறு.2007 ஆம் ஆண்டுக்கான விருதுகள் :சிறந்த படம் முதல் ப‌ரிசு - சிவா‌ஜி சிறந்த படம் இரண்டாவது ப‌ரிசு - மொழிசிறந்த படம் மூன்றாவது ப‌ரிசு - பள்ளிக்கூடம்சிறந்த படம் சிறப்புப் ப‌ரிசு - பெ‌ரியார்பெண்களை உயர்வாக சித்த‌ரிக்கும் படம் சிறப்புப் ப‌ரிசு - மிருகம்அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம் - தூவானம்சிறந்த நடிகர் - ர‌ஜினிகாந்த்சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி)சிறந்த நடிகர் சிறப்புப் ப‌ரிசு - சத்யரா‌ஜ் (பெ‌ரியார்)சிறந்த நடிகை சிறப்புப் ப‌ரிசு - பத்மப்‌ரியா (மிருகம்)சிறந்த வில்லன் நடிகர் - சுமன் (சிவா‌ஜி)சிறந்த நகைச்சுவை நடிகர் - விவேக் சிறந்த குணச்சித்திர நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)சிறந்த குணச்சித்திர நடிகை - அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)சிறந்த இயக்குனர் - தங்கர்பச்சான் (பள்ளிக்கூடம்)சிறந்த கதாசி‌ரியர் - எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே)சிறந்த உரையாடல் ஆசி‌ரியர் - பாலா‌ஜி சக்திவேல் (கல்லூரி)சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி)சிறந்த பாடலாசி‌ரியர் - வைரமுத்து (பெ‌ரியார் மற்றும் பல படங்கள்)சிறந்த பின்னணி பாடகர் - ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)சிறந்த பின்னணி பாடகி - சின்மயி (சிவா‌ஜி)சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா)சிறந்த ஒலிப்பதிவாளர் - யு.கே.அய்யப்பன் (பில்லா)சிறந்த எடிட்டர் - சதீஷ்குரோசோவா (சத்தம் போடாதே)சிறந்த கலை இயக்குனர் - தோட்டாதரணி (சிவா‌ஜி)சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)சிறந்த நடன ஆசி‌ரியர் - பிருந்தா (தீபாவளி)சிறந்த ஒப்பனை கலைஞர் - ராஜேந்திரன் (பெ‌‌ரியார்)சிறந்த தையல் கலைஞர் - அனுவர்தன் (பில்லா)சிறந்த பின்னணி குரல் - ஆண் - கே.பி.சேகர் (மல‌ரினும் மெல்லிய)சிறந்த பின்னணி குரல் - பெண் - மகாலட்சுமி (மிருகம்)2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள் : சிறந்த படம் முதல் ப‌ரிசு - தசாவதாரம் சிறந்த படம் இரண்டாவது ப‌ரிசு - அபியும் நானும்சிறந்த படம் மூன்றாவது ப‌ரிசு - சந்தோஷ் சுப்பிரமணியம்சிறந்த படம் சிறப்புப் ப‌ரிசு - மெய்ப்பொருள்பெண்களை உயர்வாக சித்த‌ரிக்கும் படம் - பூ அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம், முதல் ப‌ரிசு - வல்லமை தாராயோஅளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம், இரண்டாம் ப‌ரிசு - வண்ணத்துப்பூச்சிசிறந்த நடிகர் - கமல்ஹாசன்சிறந்த நடிகை - சினேகா (பி‌ரிவோம் சந்திப்போம்)சிறந்த நடிகர் சிறப்புப் ப‌ரிசு - சூர்யா (வாரணம் ஆயிரம்)சிறந்த நடிகை சிறப்புப் ப‌ரிசு - த்‌ரிஷா (அபியும் நானும்)சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்)சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்)சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை)சிறந்த குணச்சித்திர நடிகர் - பிரகாஷ்ரா‌ஜ் (பல படங்கள்)சிறந்த குணச்சித்திர நடிகை - பூஜா (நான் கடவுள்)சிறந்த இயக்குனர் - ராதாமோகன் (அபியும் நானும்)சிறந்த கதாசி‌ரியர் - தமிழ்ச்செல்வன் (பூ)சிறந்த உரையாடல் ஆசி‌ரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)சிறந்த பாடலாசி‌ரியர் - வாலி (தசாவதாரம்)சிறந்த பின்னணி பாடகர் - பெ‌ள்ளிரா‌ஜ் (சுப்பிரமணியபுரம்)சிறந்த பின்னணி பாடகி - மஹதி (நெஞ்சத்தை கிள்ளாதே)சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)சிறந்த ஒலிப்பதிவாளர் - ரவி (வாரணம் ஆயிரம்)சிறந்த எடிட்டர் - ப்ரவீன் - ஸ்ரீகாந்த் (சரோஜா)சிறந்த கலை இயக்குனர் - ரா‌‌ஜீவன் (வாரணம் ஆயிரம்)சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)சிறந்த நடன ஆசி‌ரியர் - சிவசங்கர் (உளியின் ஓசை)சிறந்த ஒப்பனை கலைஞர் - மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்)சிறந்த தையல் கலைஞர் - ரவீந்திரன் (பி‌ரிவோம் சந்திப்போம்)சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி)சிறந்த பின்னணி குரல் - ஆண் - எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.)சிறந்த பின்னணி குரல் - பெண் - சவீதா (பல படங்கள்)

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் யோகி

கதாநாயகனாக நடித்திருக்கும் யோகி படத்தின் ஆடீயோ வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், யோகி படத்தை நான் முழுவதுமாக பார்த்து விட்டேன். இங்கே உள்ள நடிகர்கள் வருத்தப்படக் கூடாது. ஒரு சில காட்சியில் எந்த கதாநாயகனும் செய்ய முடியாததை அமீர் செய்து இருக்கிறார் என்று போகிற போக்கில் ஒரு தகவலை கொளுத்திப் போட., அது மேடையில் இருந்த ஜெயம்ரவி, சிம்பு, ஜே.கே.ரித்திஷ் எம்.பி., உள்ளிட்டவர்களை உசுப்பி விட்டுவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
அப்போது பேசுவதற்காக மைக்கை பிடித்த சிம்பு, நல்ல இயக்குனர் கிடைத்தால் நடிப்பது ஈஸி. ஆனால் இயக்குவது, நடிப்பது இரண்டுமே கஷ்டமில்லை.. என்று கூறியதுடன், தன் பங்குக்கு, பருத்திவீரன் படம் முழுக்க நடிகர் கார்த்தி மூலம் இயக்குனர் அமீர்தான் தெரிந்தார். அந்த அளவிற்கு பிறரையே இயக்கத் தெரிந்தவர்… இதில் எப்படியெல்லாம் நடித்திருப்பார்.. என இமேஜின் பண்ண முடிகிறது என மேடையில் இல்லாத நடிகர் கார்த்தியை வம்புக்கு இழுத்து அமர்ந்தார்.

vanakkam

anaivarukkum anbu vanakkam naan oru oliparappalan enathu anubavankalai inge ini varum kaalankalil pathivu seiyairukkiren unkal aatharavu eppothum thevai